கேப்டன் விஜய்காந்துக்கு செயற்கை சுவாசம்.

photo

மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

மார்பு சளி, இடைவிடாத  இருமல் காரணமாக அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த சனிக்கிழமை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story