தேடப்படும் குற்றவாளியா அருள்நிதி ?.. கவனம் ஈர்க்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ போஸ்டர் !

KazhuvethiMoorkan

அருள்நிதி நடிப்பில் உருவாகும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 

அருள்நிதி மிரட்டலான கெட்டப்பில் நடித்துள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. ராட்சசி’ படத்தின் மூலம் கவனம் ??ஈர்த்த கௌதம்ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

KazhuvethiMoorkan
டி இமான் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், ராமேஸ்வரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுமரங்களை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ளது. 

ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படம் வரும் மே 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கவனம் ஈர்க்கும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இரண்டு வழக்குகளில் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி என்று கூறி முறுக்கு மீசையுடன் இருக்கும் மூர்க்கசாமியின் புகைப்படம் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. 

Share this story