அருள்நிதி நடிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’... ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படத்தில் ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படம் வரும் மே 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுமரங்களை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.