அருள்நிதி நடிக்கும் புதிய படம்.. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லைக்கா !

ThiruvinKural

அருள்நிதி மற்றும் பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் மிக வித்தியாசமாகவும், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘டி பிளாக்’, ‘தேஜாவு’, ‘டைரி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

ThiruvinKural

இதையடுத்து ‘ராட்சசி’ படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை லைக்கா வெளியிட்டுள்ளது. ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து முன்னணி இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். சின்டோ போதுதாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ‘திருவின் குரல்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story