அருள்நிதி படத்தில் இணைந்த 'ராஜாராணி' சீரியல் நடிகை... புதிய அப்டேட்

vj archana

அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2'  படத்தில் 'ராஜாராணி' சீரியல் நடிகை இணைந்துள்ளார். 

தன்னுடைய வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் அவர் நடிப்பில் ஹாரர் த்ரில்லரில் வெளியான 'டிமான்டி காலனி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 

vj archana

இந்த படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளனர். சி.எஸ்.சாம் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். 

vj archana

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒசூர் பகுதியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விஜே அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் அருள்நிதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜாராணி' சீரியலின் மூலம் பிரபலமானவர் விஜே அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story