ஆக்ஷனில் அடித்து நொறுக்கும் அருள்நிதி... ‘கழுவேத்தி மூர்க்கன்’ டிரெய்லர் வெளியீடு !

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் முதல்முறையாக கிராமத்து கதைக்களத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்த படம் வரும் மே 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.
‘ராட்சசி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கௌதம் ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.. அருள்நிதி மிரட்டலான கெட்டப்பில் நடித்துள்ள இப்படத்தில் ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுமரங்களை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆக்ஷனில் அருள்நிதி அடித்து நொறுக்குகிறார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Here is the #KazhuvethiMoorkan TRAILER
— venkat prabhu (@vp_offl) May 19, 2023
https://t.co/4Niywe3iPa
Get ready to see @arulnithitamil in an action packed avatar. Film in theatres from May 26th@sy_gowthamraj @OlympiaMovis @RedGiantMovies_ @ambethkumarmla @immancomposer @officialdushara @Actorsanthosh…