முரட்டு மீசை... சண்டியர் லுக்கில் அருள்நிதி.. புதிய படத்தின் மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் !

அருள்நிதியின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
‘டைரி’, ‘டி பிளாக்’, ‘தேஜாவு’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அருள்நிதி அடுத்தடுத்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ‘திருவின் குரல்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ‘ராட்சசி’ படத்தின் இயக்குனர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கிராமத்து இளைஞனாக முரட்டு மீசையில் படு மாஸாக அருள்நிதி இருக்கிறார். ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.