அருள்நிதி நடிப்பில் 'கழுவேத்தி மூர்க்கன்'.. சென்சார் குறித்த தகவல் !

arulnithi

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் செனசார் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அருள்நிதி கிராமத்து இளைஞனாக நடித்துள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ராட்சசி’ படத்தின் இயக்குனர் கௌதம்ராஜ் இயக்கியுள்ளார். மூர்க்கன் என்ற கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்துள்ளார். 

arulnithi

இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ளார். 

இந்த படம் வரும் மே 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.  ‌

 

Share this story