அருள் நிதி கலெக்டராக நடிக்கும் அருள்வான் -பட விமர்சனம்

arulnithi with udhayanithi

மலை கிராமத்தில் காடர் மொழி பேசும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஆரவ், ரம்யா பாண்டியனின் மகள் கிருத்திகா, மற்றவர்களை போல் படிக்க ஆசைப்படுகிறார். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அவரது வாழ்க்கை சூழல் அதற்கு இடம் தரவில்லை. தானும் படித்து, மலை கிராம சிறுவர், சிறுமியரும் படிக்க ஆசைப்படும் கிருத்திகா, தனியாக மலையை விட்டு நகரத்துக்கு வந்து, கலெக்டர் அருள்நிதியை சந்திக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. மலைவாழ் மக்கள் கல்வி பெற்று உயர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், நேர்மையான கலெக்டர் முத்துவேலாகவே வாழ்ந்திருக்கும் அருள்நிதிக்கு இப்படம் ஒரு மைல் கல்.

அவரது இயல்பான பேச்சும், முதிர்ச்சியான நடிப்பும், அலட்டாத உடல்மொழியும், இப்படியொரு கலெக்டர் நமக்கு வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பழங்குடி இனத்தவராக ஆரவ், ரம்யா பாண்டியன் நிறைவாக நடித்துள்ளனர். படத்தின் தூண் கிருத்திகா, யதார்த்தமான நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார். படிப்புக்காக ஏங்கும் அவரது காடர் மொழி கோரிக்கை, கல் மனதையும் கரைய வைக்கும். 

Share this story