அருண் விஜய்யின் பிறந்தநாளில் இனிப்பு செய்தி... 'அச்சம் என்பது இல்லையே' ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

arun vijay

 அருண் விஜய் பிறந்தநாளையொட்டி 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

உனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் அருண் விஜய். கடைசியாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'யானை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக அருண் விஜய் நடித்து வருகிறார்.

arun vijay

ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. 

arun vijay

இந்த படப்பிடிப்பு நிறைவு பெற்று விரைவில் சென்னையில் துவங்க இருக்கிறது. இந்த படத்திற்காக மிகப்பெரிய பொருட்செலவில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இதையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story