ஆக்‌ஷன் காட்சிகளுடன் நிறைவுபெற்ற ‘அச்சம் என்பது இல்லையே’.. கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய் !

AchchamEnbathuIllayae

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதை அடுத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

AchchamEnbathuIllayae

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’. வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படங்களை இயக்கி வரும் ஏ.ஏல் விஜய், இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்  கதாநாயகனாக நடித்து வருகிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.   

AchchamEnbathuIllayae

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. 

AchchamEnbathuIllayae

இதையடுத்து மீண்டும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிக்கட்ட க்ளைமேக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Share this story