ஆக்ஷனில் தெறிக்கவிடும் அருண் விஜய்... மிரட்டலான ‘மிஷன்’ டீசர் வெளியீடு !
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன்’ சாப்டர் 1 டத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அருண் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஷன்’ சாப்டர் 1. இருபாகங்களாக வெளியான உள்ள இப்படத்திற்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று ஏற்கனவே தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தலைப்பு ‘மிஷன் சாப்டர் 1’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஏல்.விஜய்யின் மாறுப்பட்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. ‘மதராசப்பட்டிணம்’, ‘தங்கமகன்’, ‘2.O’ எமி ஜாக்சன் ஆகிய படங்களில் நடித்த எமி ஜாக்சன் இந்த படத்தில் ஜெயில் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஜெயில் கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தந்தை - மகள் பாசப்போராட்டை வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வரவேற்பை பெற்றுள்ளது.