ஏ.எல்.விஜய் - அருண் விஜய் கூட்டணியில் ‘மிஷன்... டீசர் குறித்த முக்கிய அப்டேட்

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஏல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர் 1’. இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மிரட்டலான இசையை கம்போசிங் செய்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ள. இதுதவிர சில காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.