ஹரி- அருண் விஜய் கூட்டணியின் 'யானை' திரைப்படம்... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் 'யானை' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா, யோகிபாபு, கே.ஜி.எப். பட வில்லன் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், மூத்த நடிகர் ராஜேஷ், இமான் அண்ணாச்சி, ‘குக் வித் கோமாளி’ புகழ், அபிராமி அம்மு உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர்.

அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகி வரும் இப்படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிராம பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுது.
இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி வெளியாக இருப்பதாக த் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போதும் படம் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
வரும் ஜூன் 17-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

