எலும்பு முறிவால் அவதிப்பட்ட அருண் விஜய்... அதிர்ச்சி புகைப்படங்கள்
ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ ஸ்ரீஸ்ரீ சாய் மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. தன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் தந்தை சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் அங்கிருந்து தப்பி தனது மகளின் உயிரைக் காப்பாற்றினாரா என்பது தான் கதைக்களம்.
நடிகர் அருண் விஜய் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட எலும்பு முறிவு, மற்றும் தசைநார் கிளிப்பால் மிகவும் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்