அருண் விஜய் நடிப்பில் உருவான ‘வணங்கான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

arun vijay

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தப் படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ரிலீஸாகவில்லை. இந்நிலையில், இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.vanagan

 14-ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டிய வெளியீடாக ‘வணங்கான்’ ரிலீசாகிறது. பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் சேர்த்து ‘பாலா 25’ நிகழ்ச்சியையும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

Share this story