‘விடாமுயற்சி’ படத்தை ரசிகர்களுடன் பார்த்த அருண் விஜய்... !

ajith

நடிகர் அருண் விஜய், ரசிகர்களுடன் இணைந்து விடாமுயற்சி படம் பார்த்துள்ளார். 


அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் நேற்று (பிப்ரவரி 6) நாடு முழுவதும் வெளியானது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் அஜித் தன்னுடைய வழக்கமான படங்களைப் போல் அல்லாமல் விடாம முயற்சி படத்தில் வித்தியாசமான முறையை கையில் எடுத்திருக்கிறார். அதாவது இந்த படம் மாஸான எந்த பில்டப்பும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் திரையரங்கிற்கு திரண்டு வந்து படத்தை பார்த்து மகிழ்கின்றனர்.

trisha

அதேசமயம் திரிஷா, அனிருத் ,ஷாலினி, அர்ஜுன் தாஸ், ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற பிரபலங்களும் விடாமுயற்சி படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்து ரசித்தனர். இந்த வகையில் நடிகர் அருண் விஜயையும் விடாமுயற்சி படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



நடிகர் அருண் விஜய் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story