விஜயகாந்த் விட்டதை தொடர்ந்து பண்ணுவேன் - அருண் விஜய் எடுத்த முடிவு

விஜயகாந்த் விட்டதை தொடர்ந்து பண்ணுவேன் - அருண் விஜய் எடுத்த முடிவு

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அருண் விஜய் கையில் கட்டு போட்டபடி வந்து அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் விட்டுச் சென்ற நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வேன். நடிகர் சங்க வளாகத்திற்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என்பது என் கோரிக்கை என கூறினார். 
 

Share this story