மிஷன் படத்தில் அருண் விஜய் குதிக்கும் காட்சி ரியல் - இயக்குநர் பேட்டி

மிஷன் படத்தில் அருண் விஜய் குதிக்கும் காட்சி ரியல் - இயக்குநர் பேட்டி

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ ஸ்ரீஸ்ரீ சாய் மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த  படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. தன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் தந்தை சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் அங்கிருந்து தப்பி தனது மகளின் உயிரைக் காப்பாற்றினாரா என்பது தான் கதைக்களம். 

மிஷன் படத்தில் அருண் விஜய் குதிக்கும் காட்சி ரியல் - இயக்குநர் பேட்டி

 இந்நிலையில் படம் குறித்து பேசிய இயக்குனர் விஜய், படத்தில் நடிகர் அருண் விஜய் மொட்டை மாடியில் இருந்து குதிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சி சிஜி கிடையாது ரியலாகவே அருண் விஜய் தான் அந்த காட்சியை செய்தார் என தெரிவித்துள்ளார்

Share this story