"கௌரவ வேடத்துக்கு குட் பை" -ஆர்யா ஹீரோவாக நடிக்கும் "அனந்தன் காடு’

arya
நடிகர் ஆர்யா தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் .குறிப்பாக அவர் நடித்து பெரிய வெற்றி பெற்ற அறிந்தும் அறியாமலும் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் ,ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை .இந்நிலையில் அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நண்பர்களுக்காக கௌரவ வேடங்களில் நடித்துள்ளார் 
அது மட்டுமல்லாமல் நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்காக வில்லன், கவுரவ வேடம் என்று இமேஜ் பார்க்காமல், சம்பளத்தை எதிர்பார்க்காமல் நடித்து நல்ல பெயர் வாங்கியிருக்கும் ஆர்யா.சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்த ‘திரு.மாணிக்கம்’ என்ற படத்திலும், விஷால் ஹீரோவாக நடித்த ‘மதகஜராஜா’ என்ற படத்திலும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்  ஆர்யா.
அடுத்து , ‘அனந்தன் காடு’ படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். வினோத் குமார் தயாரித்துள்ளார். ஜீயன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ‘எம்புரான்’ முரளி கோபி கதை எழுதியுள்ளார். நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி நடித்திருந்த ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தை இயக்கியவர் ஜீயன் கிருஷ்ணகுமார். ‘அனந்தன் காடு’ படத்தில் ஆர்யா, இந்திரன்ஸ், முரளி கோபி, ரெஜினா கெசண்ட்ரா, நிகிலா விமல் நடித்துள்ளனர். யுவா ஒளிப்பதிவு செய்ய, ‘காந்தாரா’ பி.அஜ்னீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார்.மீண்டும் ஹீரோவாக மிரட்டும் ஆர்யாவின் இந்த படம் விரைவில் வெள்ளித்திரையில் வர வுள்ளது 

Share this story