கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் ஆர்யா... 'Mr.X' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'Mr.X' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் முறையாக நடிகர் ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'Mr.X'. இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், கெளதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்து 'எப்.ஐ.ஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இணையத்தள குற்றத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைத்து வருகிறார். தன்வீர் வீர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.