ஆர்யா - கவுதம் கார்த்திக் கூட்டணியில் ‘MrX’... படத்தில் இணைந்த முக்கிய நடிகை !

MrX

ஆர்யா - கவுதம் கார்த்தி கூட்டணியில் உருவாகும் ‘Mr.X’ படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

MrX

நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘Mr.X’.  இணையத்தள குற்றத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  'எப்.ஐ.ஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார். 

MrX

இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், கெளதம் கார்த்திக் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அனகா நடிக்கிறார். இவர்களுடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தன்வீர் வீர் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.

MrX

இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்யா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதையடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. 

Share this story