‘ஐ லவ் யூ’ மாமா... ஆர்யாவிற்கு திருமண நாள் வாழ்த்து கூறிய சாயிஷா !

arya

நடிகர் ஆர்யாவிற்கு அவரது மனைவி சாயிஷா திருமண வாழ்த்து கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் க்யூட் ஜோடியாக வலம் வருபவர்கள் ஆர்யா - சாயிஷா. நட்சத்திர தம்பதியான அவர்கள், ‘கஜினிகாந்த்’ படத்தின் மூலம் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு ‘காப்பான்’ படத்திலும் ஒன்றாக இணைந்து நடித்தனர். இதனால் இருவரும் காதல் வயப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். 

arya

இந்த தம்பதிகளுக்கு அர்யானா என்ற மகள் இருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தம்பதி தங்களது திருமண நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஆர்யா - சாயிஷா ஜோடி இன்று தங்களது 4வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த ஜோடிக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

arya

இந்நிலையில் காதல் கணவருக்கு நடிகை சாயிஷா, திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யாவுடன் காதல் வயப்பட்டு திருமண செய்துக்கொண்டேன். பொறுமை, வலிமை, என்னை மகிழ்விக்கும் திறன் கொண்ட வலிமையான மனிதர். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜான். உங்களுக்கு திருமணம் பல சவால்களை கொடுத்தாலும் எப்போதும் என் அருகில் இருப்பதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு இன்ஸ்டா ஸ்டேட்டஸில், மாமா.. ஐ லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். 

 

 

 

Share this story