ஆர்யா - கௌதம் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர் எக்ஸ்’ டீசர் வெளியானது

arya

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் பட டீசர் வெளியாகி உள்ளது. 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஆர்யா, சார்பட்டா பரம்பரை 2, வேட்டுவம் ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அதுல்யா ரவி, அனகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். எஃப்ஐஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

arya

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். ஜிகே பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். ஸ்பை திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.


இந்த டீசரில் ஆக்சன் காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்த படம் ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. அதன்படி ஆர்யா, சரத்குமார், கௌதம் கார்த்திக் ஆகியோர் ஸ்பை ஏஜென்ட்களாக நடித்திருக்கிறார்கள். மஞ்சு வாரியர் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தற்போது இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story