விரைவில் தொடங்கும் ஆர்யாவின் ‘MrX‘ ஷூட்டிங்... புதிய அப்டேட்

mrx

 ஆர்யாவின் ‘MrX’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

'எப்.ஐ.ஆர்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘Mr.X’.  இந்த படத்தில் இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், கெளதம் கார்த்திக் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அனகா நடிக்கிறார். 

mrx

இவர்களுடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இணையத்தள குற்றத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தன்வீர் வீர் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையொட்டி இப்படத்தின் அடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

Share this story