ஆர்யா நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ டீசர் நாளை ரிலீஸ...!

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கடந்த ஜனவரி மாதம் விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்தார். அடுத்தது இவர், பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை 2, வேட்டுவம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிகர் கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆக்ஷன் கலந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தினை எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைக்க தன்வீர் மிர் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
The take over begins. #MrX - Teaser from TOMORROW 🔥🔥
— Arya (@arya_offl) February 21, 2025
Produced by @lakku76 #Maverik
Co-produced by @venkatavmedia @Prince_Pictures @Gautham_Karthik @itsmanuanand @realsarathkumar @ManjuWarrier4 @AnaghaOfficial @raizawilson @athulyaofficial @dhibuofficial @vincentcinema… pic.twitter.com/YYQmFZ27HU
null
அதன்படி ரிலீஸுக்கு தயாராகி வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை (பிப்ரவரி 22) வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.