முத்தையா - ஆர்யா கூட்டணியில் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’... துவம்சம் செய்யும் டிரெய்லர் வெளியீடு !

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கிராமத்து திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, பாக்யாராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இப்படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தை ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் மற்றும் ரொமான்ஸ் திரைப்படங்களில் நடித்து வரும் ஆர்யா, நீண்ட இடைவெளிக்கு கிராமத்து நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.