விரைவில் வெளியாகும் ஆர்யாவின் ‘தி வில்லேஜ்’... புதிய அப்டேட்

TheVillage

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி வில்லேஜ்’ வெப் தொடர் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. 

சமீபகாலமாக வெப் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக தமிழில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் ‘தி வில்லேஜ்’. 

TheVillage

இந்த வெப் தொடரை ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். த்ரில்லர் ஜோனரில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நடிகை வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக கிராபிக் நாவலை அடிப்படையாக வைத்து இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. 

அமேசான் ப்ரைம் ஓடிடித் தளத்திற்காக உருவாகியுள்ள இந்த வெப் தொடர் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல ஸ்ஜோம்பி கைகள் ஆர்யா உள்ளே இழுப்பது போன்று திகில் போஸ்டர் வெளியாகி வெப் தொடருக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 
 

Share this story