பிரபல மலையாள இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஆர்யா ?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் குட் நைட் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றோரு தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, 2018 என்ற வெற்றிப்படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரபல முன்னணி ஹீரோவான ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கஉள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தில் முன்னணி ஹீரோவான ரவி மோகன் வில்லனாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.