ஆர்யா – நிகிலா விமல் நடிக்கும் ‘அனந்தன் காடு’ படத்தின் டீசர் வெளியீடு!

1

நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து சார்பட்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

இதனிடையே, ஆர்யா தனது 36-வது படமாக அனந்தன் காடு படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நிகிலா விமல், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தை ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த நிலையில், அனந்தன் காடு படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Share this story