ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு தொடக்கம்
'எப்.ஐ.ஆர்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘Mr.X’. இந்த படத்தில் இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், கெளதம் கார்த்திக் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அனகா நடிக்கிறார். இவர்களுடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இணையத்தள குற்றத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தன்வீர் வீர் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.
nullReady to shoot the Introduction for #MrX 💪
— Arya (@arya_offl) February 6, 2024
Let's rollllll it brother @itsmanuanand 🔥
First look and Teaser soon 🤩
Brother @Gautham_Karthik is already killing it in the film 🔥💪@realsarathkumar sir the Real macho Man 💪💪@ManjuWarrier4 The Iron Lady of #MrX 💪… pic.twitter.com/BSIEBhBuO8
தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ஆர்யா வெறித்தனமாக தயாராகி வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.