ஆர்யாவின் தி வில்லேஜ் வெப் தொடர் நவம்பரில் ரிலீஸ்

ஆர்யாவின் தி வில்லேஜ் வெப் தொடர் நவம்பரில் ரிலீஸ்

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்ப்பட்டா பரம்பரை நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இந்த ஹிட்டால் ஆர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகின. அவரது  நடிப்பில் அடுத்ததாக கேப்டன் திரைப்படம் வெளியானது. டெடி, படமும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. 

ஆர்யாவின் தி வில்லேஜ் வெப் தொடர் நவம்பரில் ரிலீஸ்

அதை தொடர்ந்து, தி வில்லேஸ் என்ற வெப் தொடரில் ஆர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார். நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இந்த தொடரை இயக்கியிருக்கிறார். வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடரின் முதல் பார்வை ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிசம்பர் மாதம் தி வில்லேஜ் தொடர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் இந்த தொடர் நேரடியாக வெளியாகிறது. 

Share this story