'மனசிலாயோ' பாடலுக்கு இணைந்து நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்

manasilayo

ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா  சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் நாளை (அக்டோபர் 10) திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடலாக வெளியான மனசிலாயோ பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை AI தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியுள்ளனர். மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், 'மனசிலாயோ' ட்ரெண்டில் இணைந்து நடிகர் அசோக் செல்வன் மற்றும் மற்றும் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Share this story