போலீசாக மிரட்டும் அசோக் செல்வன்.. ‘போர் தொழில்’ ரிலீஸ் அறிவிப்பு !

porthozil

 அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இளம் நடிகரான அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘போர் தொழில்’. இந்த படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்த நிகிலா விமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

porthozil

த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். கலைச்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அப்பலாஸ் என்டர்டெயின்மென்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்துள்ள இப்படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story