சூர்யாவுடன் போட்டி போடும் அசோக் செல்வன்...!

ashok selvan

அசோக் செல்வன் ப்ளு ஸ்டார் பட வெற்றியை தொடர்ந்து பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது நோஹா ஆபிரஹாம் இயக்கத்தில் கேங்க்ஸ் என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இத்தொடருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார்.


இதனிடையே ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார் இப்படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அஷோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். திருமலை தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.  ashok selvan
  
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச்சில் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளதாக தெரிகிறது. அதன்படி நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக புது போஸ்டர் சமூக வலைதளங்கலில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படம் நவம்பர் 14 வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து. 

Share this story