அசோக் செல்வனின் 23 வது படம் பூஜையுடன் தொடக்கம்...

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது அசோக் செல்வன் 23 - வது படத்தின் பூஜை விழா நடைப்பெற்றுள்ளது.
Very very excited to announce our next project #AS23 🔥🔥🔥 Starring @AshokSelvan and @PreityMukundan Directed by #KarthikRamakrishnan written by @vigneshraja89
— Happy High Pictures (@HappyHighPic) February 9, 2025
More details to follow @abinaya_selvam pic.twitter.com/g1V9O4uNGC
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். படத்தின் கதாநாயகியாக ஸ்டார் திரைப்பட கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளார். இப்படத்தை அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து ஹாப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.