முதல் காதலை விட முதல் க்ரஷ் இனிமையானது - அசோக் செல்வன்

முதல் காதலை விட முதல் க்ரஷ் இனிமையானது - அசோக் செல்வன்

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வருபவர் அசோக் செல்வன்.  ‘ஓ மை கடவுளே’,  ஹாஸ்டல், மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதுதரவி புதிய இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ள அவர், அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் அசோக் செல்வன் நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

முதல் காதலை விட முதல் க்ரஷ் இனிமையானது - அசோக் செல்வன்

கிளீயர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா மற்றும் கேப்டன் மெகா என்டர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளராகவும், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 15-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசோக் செல்வன், முதல் காதலை விட க்ரஷ் இனிமையானது என்றும், எப்போதும் நம் மனதில் இடம் பிடித்திருக்கும். அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தான் சபா நாயகன் என்று கூறினார்.

Share this story