இணையத்தை வட்டமடிக்கும் ‘அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனின்’ திருமண அழைப்பிதழ்.

photo

அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் ஜோடி திருமணம் செய்ய உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து தற்போது அவர்களின் திருமண அழைப்பிதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

photo

விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘சூது கவ்வும்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் அசோக் செல்வன், தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, பீட்சா 2 வில்லா, மன்மத லீலை, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்  நடிகர் அசோக் செல்வன். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியான நிலையில் தற்போது அவர்களின் திருமண பத்திரிக்கை இணையத்தை வட்டமடித்து வருகிறது.

photo

அந்த அழைப்பிதழில் ‘ மன்றல் விழா அழைப்பிதல் என பொறிக்கப்பட்டு செப்டம்பர் 13ஆம் தேதி இவர்களின் திருமணம் திருநெல்வேலி மாவட்டம், இட்டேரி கிராமத்தில் அமைந்துள்ள அருண் பாண்டியனின் பண்ணை இல்லத்தில் (சேது அம்மாள் பண்ணை இல்லம்) நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் முக்கிய விஷயமே பசுமை விருந்து பரிமாறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது’.  

Share this story