"டைரக்ஷன் செய்யும் எண்ணம் இருக்கிறது".அசோக் செல்வன் வெளியிட்ட தகவல்
அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் . இந்த படத்தை ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அசோக் செல்வனே தயாரித்தும் உள்ளார். இது குறித்து அவர் கூறியது:தயாரிப்பாளராகவும் பணியாற்றுவது ரிஸ்க்தான். ஆனால் ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை இல்லை. மனைவியின் அன்பில் இருக்கும் ஒருவன், ஓர் அசாதாரண சூழலை எதிர்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இது வெறும் கதையாக மட்டும் வந்தபோது, இதில் திரைக்கதைக்காக அதிக காலம் எடுக்க வேண்டியிருந்தது.
அதனால் இயக்குனர் கார்த்திகேயனுடன் சேர்ந்து நானும் திரைக்கதை எழுதினேன். திரைக்கதை எழுதுவது இதுவே முதல்முறை. சினிமா மீதுள்ள காதலால் இதில் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து டைரக்ஷன் எண்ணமும் இருக்கிறது. இந்த படத்தில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை வித்தியாசமாக வடிமைத்திருக்கிறார். அவரது ஸ்டன்ட் காட்சிகளுக்காக கதையில்கூட சில மாற்றங்கள் செய்திருக்கிறோம்.
பிரீத்தி முகுந்தனின் சிறப்பான நடிப்பாற்றலை இந்த படத்தில் பார்க்கலாம். எங்களுக்கு இடையே ஜோடி கெமஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சினிமா மீது தீராத காதல் இருக்கிறது. அதே சமயம், ஓடிடிக்காக நல்ல கதைகள் வந்தாலும் அதையும் செய்வேன். இவ்வாறு அசோக் செல்வன் கூறினார்.

