நடிகையை திருமணம் செய்யப்போகும் ‘அசோக் செல்வன்’.

photo

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக இருக்கும் அசோக்செல்வனிற்கும் பிரபல நடிகரின் மகளுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘சூது கவ்வும்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் அசோக் செல்வன், தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, பீட்சா 2 வில்லா, மன்மத லீலை, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்  நடிகர் அசோக் செல்வன். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர்களது திருமணம் செப்டம்பர் 13ஆம் தேதி நெல்லையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அசோக் செல்வன் தரப்பிலோ, கீர்த்தி பாண்டியன் தரப்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story