சொத்துக்கள் முடக்கம்... அமலாக்கத்துறையின் அதிகார துஷ்பிரயோகம்... இயக்குநர் ஷங்கர் அறிக்கை

shankar

'எந்திரன்' திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய விவகாரத்தில், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை அதிகார துஷ்பிரயோகம் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.


தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கரின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை நேற்று அறிவித்திருந்தது. 2010ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை உரிமை தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை அமலாக்கத்துறை தீவிர விசாரணைக்குப் பிறகு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.shankar

இந்நிலையில் 'எந்திரன்' திரைப்படத்தின் கதை காப்புரிமை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது குறித்து இது அமலாக்கத்துறையின் அதிகார துஷ்பிரயோகம் என ஷங்கள் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஷங்கர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ எந்திரன் கதை உரிமம் தொடர்பான வழக்கில் ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தால் முழுமையாக தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. இரு தரப்பினரின் ஆதாரங்களையும் மிக கவனமாக ஆராய்ந்து ஆருர் தமிழ்நாடன் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இந்தத் தெளிவான தீர்ப்பு இருந்த போதிலும், அமலாக்கத்துறை, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) அறிக்கையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து, எனது சொத்துக்களை முடக்கியுள்ளது. இந்த சட்ட செயல்முறையானது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். இந்த நடவடிக்கையால் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன்.shankar

அசையா சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக இன்று வரை, அமலாக்கத் துறையிடம் இருந்து எந்த தகவலும் இல்லை, ஆனால் அதற்கு முன்பே சொத்துகள் முடக்கப்பட்டது ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டுவிட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து, இந்த விஷயத்தில் மேலும் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அவ்வாறு நடவடிக்கை எடுக்க செய்யத் தவறினால், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார். இதனுடன் அப்போது வெளியான தீர்ப்பையும் இணைத்துள்ளார்

shankar

'எந்திரன்' திரைப்பட கதையின் காப்புரிமை குறித்தான இந்த வழக்கு 2011-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவரால் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. அப்போது இது குறித்து ஆரூர் தமிழ்நாடன், “ 'ஜூகிபா' கதைக்கும் 'எந்திரன்' கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. என் கதையைத் திருடி `எந்திரன்' திரைப்படத்தை எடுத்து, இயக்குநர் ஷங்கர் மோசடி செய்திருக்கிறார். இது காப்புரிமைச் சட்டப்படி கிரிமினல் குற்றம்" என்று வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் 

Share this story