‘விஜய் 69’ படத்தில் கமிட் ஆன அசுரன் பட நடிகர்
‘விஜய் 69’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க டிஜே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் ‘விஜய் 69’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடித்து வரும் முக்கிய நடிகர்கள் அனைவரையும் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். தற்போது இதில் டிஜேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இவர் ‘அசுரன்’ மற்றும் ‘பத்து தல’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘விஜய் 69’ படத்தில் மமிதா பைஜு உடன் நடித்து வருவதாக டிஜே அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.