தாய் பாசம் குறித்து பேசும் ‘கண்ணே கண்மணியே’... ‘பீட்சா 3’ இரண்டாவது பாடல் !

Pizza3
‘பீட்சா 3’ படத்தின் இரண்டாவது லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. 

ஹாரர் த்ரில்லரில் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரைப்படம் 'பீட்சா'. இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து மூன்றாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார்.  நடிகர் அஷ்வின் ஹீரோவாக நடித்துள்ளார். 

Pizza3

‘பீட்சா 3’ தி மம்மி என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.இவர்களுடன் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே 'மின்னல் கண்ணிலே' என தொடங்கும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில்  இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தாய் பாசம் குறித்து பேசும் கண்ணே கண்மணியே என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மோகன் ராஜன் எழுதிய இந்த பாடலை லலிதா சுதா பாடியுள்ளார். 

Share this story