பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி.. சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி...

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி.. சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி...

முன்னணி காமெடி நடிகராக சூரி, தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூரியின் நடிப்பு அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதனால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ‘விடுதலை’ படத்திற்கு நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இந்த படத்தில் ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா ஆகிய படங்களில் நடித்த நடிகை ஆனா பென் கதாநாயகியாக நடித்து வருகிறார். பல சர்வதேச விருதுகளை பெற்ற ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ். வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் சேவலை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாக உருவாகிறது. 

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி.. சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி...

இந்நிலையில்,  ‘கொட்டுக்காளி’ படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் படம் என்ற பெருமையை கொட்டுக்காளி பெற்றுள்ளது.  இந்த செய்தி மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 

Share this story