ஏப்ரல் மாத இறுதியில் தலைவர் 171... அப்டேட் கொடுத்த லோகேஷ்...

ஏப்ரல் மாத இறுதியில் தலைவர் 171... அப்டேட் கொடுத்த லோகேஷ்...

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து,  ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். 

இந்நிலையில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள 'அவள் பெயர் ரஜ்னி' படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படம் குறித்து பேசியுள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் தலைவர் 171 படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அடுத்த வாரம் முதல் திரைக்கதை எழுத இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this story