‘மான்ஸ்டர்’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா... விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

atharva

 அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகை அதர்வா. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ‘குருதி ஆட்டம்‘, ‘பட்டத்து அரசன்’ ஆகிய திரைப்படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை. அதனால் அவரது நடிப்பில் உருவாகியுள்ள நிறங்கள் மூன்று, தணல் ஆகிய படங்களை நம்பியிருக்கிறார். 

atharva

இந்நிலையில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வழக்கமான திரைப்படங்கள் இந்த படமும் புதிய கதைக்களத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. 

atharva

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் அதர்வாவிற்கு நெல்சன் வெங்கடேசன் திரைப்படம் கை கொடுக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Share this story