அதர்வாவின் மிரட்டலான நடிப்பில் ‘நிறங்கள் மூன்று’.. டிரெய்லர் வெளியீடு

துருவங்கள் பதினாறு, மாறன் ஆகிய படங்களுக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க அதீத திரில்லர் சம்பவங்கள் நிறைந்து உருவாகும் இப்படத்தின் எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. ஐங்கரன் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் சிக்கல்கள் தீர்க்கப்பட்டதை அடுத்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Happy to release the trailer of #NirangalMoondru - a gripping hyperlink thriller on the way for audiences.https://t.co/5o3ARFDUd1
— A.R.Rahman (@arrahman) March 3, 2023
Best wishes to @karthicknaren_M and the team@Atharvaamurali @actorrahman @realsarathkumar @Ayngaran_offl @idiamondbabu @SureshChandraa pic.twitter.com/JUp5PskxuC