அடித்து நொறுக்கும் அதர்வா... 'பட்டத்து அரசன்' டிரெய்லர் வெளியீடு !

PattathuArasan

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டத்து அரசன்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

இளம் நாயகனாக அதர்வா மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'.  லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதர்வாவுக்கு ஜோடியா ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

PattathuArasan

இந்த படத்தை களவாணி, களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கபடி மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வா அடித்து நொறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story