SK25 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணத்தை கூறிய அதர்வா!
SK25 படத்தில் நடிக்க என்ன காரணம் என்பது குறித்து நடிகர் அதர்வா ஓபனாக பேசியுள்ளார். அமரன் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வரவேற்புக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் அமரன். மறைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருந்தார். முழுக்க முழுக்க இராணுவ கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்தது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமரன் அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 25ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். SK25 என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் இணைந்தது குறித்து நடிகர் அதர்வா கூறியிருக்கிறார். அதில், பரதேசி படத்திலிருந்து சுதா கொங்கராவை தெரியும். நாங்கள் இருவரும் ரொம்ப குளோஸ் ஃப்ரண்ட். மறுபடியும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று சொல்லியிருந்தார். அதற்காக இந்த படத்தில் படம் பண்ணலாம் என்று சொன்னாங்க. அதோடு, இந்த படத்தில் இணைந்த எல்லோருமே தெரிந்தவர்கள் தான் என்று கூறியுள்ளார். Dawn Pictures and Red Giant Movies நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. அதர்வா நடிப்பில் இப்போது வரையில் வெளியான எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடிய கதைக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு கதையை எஸ்கே25 படம் கொடுக்கும் என்று தெரிகிறது. பானா காத்தாடி படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, தற்போது Address, Thana and SK25 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.