அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டீசர் அப்டேட்

DNA

அதர்வா நடிக்கும் டிஎன்ஏ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதை தொடர்ந்து பரதேசி, சண்டிவீரன், ஈட்டி, இமைக்கா நொடிகள், 100 என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியிருக்கிறார்.

DNA

இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீன் சாய்வி, சகி சிவா ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்தில் பின்னணி இசைக்கான பணிகளை கவனித்துள்ளார். பார்த்திபன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சபு ஜோசப் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படபிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை (ஜனவரி 10) மதியம் 12:05 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Share this story